ஐஐடி காரக்பூரில் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி காரக்பூரில் 4-ஆம் ஆண்டு இயந்திர பொறியியல் படித்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த ரிதம் மொண்டல் (21) என்கிற மாணவர், இன்று காலை 11.30 அறை கதவை திறக்காததால், சக மாணவர்கள் விடுதி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். இதை அவர்கள் ஹிஜ்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் வந்த காவல்துறையினர், அறையில் உடைத்து பார்த்தபோது, மாணவரின் உடல் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மாணவரின் உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஐடி-களில், மன அழுத்தம், தனிமைப்படுத்தல், சாதி பாகுபாடு உள்ளிட்ட காரணங்களால் மாணவர் தற்கொலை கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 7 மாதங்களில், இது ஐஐடி காரக்பூரில் நடந்த 4ஆவது தற்கொலை சம்பவமாகும். கடந்த 2018 முதல் 2024 வரையில், ஐஐடிகளில் 33 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.